”அவர்கள் மனித மாமிசம் உண்பவர்கள்..” - அமெரிக்காவில் சொந்த குடும்பத்தினரைச் சுட்டுக் கொன்ற இளைஞர்!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினரைக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
cesar olalde and family
cesar olalde and familytwitter page

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் சீசர் ஒலால்டே. 18 வயதான இவர், தற்கொலைக்கு முயல்வதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைக்க, அவரது வீட்டிற்கு போலீஸ் விரைந்துள்ளது. சீசர் ஒலால்டேவின் தற்கொலையை தடுத்து நிறுத்திய நிலையில், அங்கு நிலவிய காட்சிகளால் போலீசாருக்கு அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில், சீசர் ஒலால்டேவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பேரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து காவல் துறையினர், “சீசர் ஒலால்டே, அவரது பெற்றோர்களான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவரின் மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார். அவர்களைக் கொலை செய்தது ஏன் என சீசரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

அதாவது, 'என் குடும்ப உறுப்பினர்கள் மனித மாமிசம் உண்பவர்கள். அவர்கள் என்னையும் சாப்பிட முயன்றார்கள்; அதனால்தான் சுட்டுக்கொலை செய்தேன்' என சீசர் சொன்னதைக் கண்டு திடுக்கிட்டோம்.

அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் சுடப்பட்டு இறந்திருக்கின்றனர். பல இடங்களில் ரத்தம் சிதறிக் கிடந்தது. அதேநேரத்தில், கொலை செய்யப்பட்டவர்கள் குறித்து அண்டை வீட்டாரிடம் விசாரித்தோம்.

அவர்களோ, ’ரூபன் ஒலால்டே குடும்பத்தினர் அனைவரும் நல்லவர்கள்; எந்தப் பிரச்னைக்கும் செல்லாதவர்கள். எதற்காக அவர்களை, சீசர் கொலை செய்தார்’ எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் சீசர் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர், எதற்காக கொலை செய்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com