"துள்ளி குதித்து சென்றான்.....கோமா நிலையில் திரும்பினான்"

"துள்ளி குதித்து சென்றான்.....கோமா நிலையில் திரும்பினான்"
"துள்ளி குதித்து சென்றான்.....கோமா நிலையில் திரும்பினான்"

வடகொரியாவில் சுற்றுலா சென்ற போது பிரச்சார பதாகைகளை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 15ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் தற்போது கோமா நிலையில் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். 

அமெரிக்காவிலிருந்து நல்லெண்ண நடவடிக்கையாக வடகொரியாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒட்டோ வார்ம்பியர் என்ற இளைஞர் குடும்பத்துடன் சென்றார். அப்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர் அந்நாட்டின் பிரச்சார பதாகையை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்து ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் எனக்கூறி ஒட்டோவுக்கு 15 ஆண்டுகள் கடினமான வேலைகளை செய்யும் கடுங்காவல் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து சிறையில் கடின வேலைகள் செய்யும்படி சித்தரவதை செய்யப்பட்ட இளைஞர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் 17 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த ஒட்டோவை வடகொரியா தற்போது விடுதலை செய்துள்ளது. துள்ளி குதித்தபடி வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற ஒட்டோ, உடல் சுருங்கி கோமா நிலையில் தற்போது தாயகம் திரும்பியுள்ளார். தன் மகனுக்கு நேர்ந்ததை இந்த உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், இதுபோல வேறுயாருக்கும் நிகழக்கூடாது எனவும் ஒட்டோவின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com