தாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்

தாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்
தாய் அணில் கட்டிய ‘பாசக்கூடு’ - சிக்கித் தவித்த குட்டிகள்

தாய் அணில் அமைத்த கூட்டால், குட்டிகளின் வால் ஒன்றோடு ஒன்றோடு பிணைந்து சிக்கலை ஏற்படுத்திய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில் அணில் ஒன்று புல், பிளாஸ்டி குப்பைகள் அனைத்தையும் சேகரித்து கூடு அமைத்தது. அதில் தனது 5 குட்டிகளையும் ஒன்றாக சேர்த்து பாதுகாத்து வந்தது. நாளடைவில் கூடுகளில் இருந்த குப்பைக்கூளங்களில் அணில் குட்டிகளின் வால்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டன. இதனால் 5 குட்டிகளும் நகரமுடியாமல் தவித்தன. 

இதையடுத்து மில்வாக்கி வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு அணில் குட்டிகள் எடுத்து செல்லப்பட்டு ஒட்டிக்கிடந்த வால்களை பிரிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அணில் குட்டிகளுக்கு வால் மிகவும் முக்கியம் என்பதால் அதற்கு மயக்க மருந்து செலுத்தி வால்கள் குப்பையிலிருந்து மெதுவாக பிரித்து விட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது எந்த வால் எந்த அணிலுடையது எனத் தெரியாமல் உயிரின ஆர்வலர்கள் குழப்பமடைந்தனர். அதன்பின் சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அணில்களின் வால்கள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com