உலகம்
நலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..!
நலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
73 வயதான ட்ரம்ப், திடீரென மேரிலேண்டில் உள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. திட்டமிடப்படாத இந்த முழு உடல் பரிசோதனை குறித்த தகவல் பரவிய நிலையில், அவர் நலமுடன், உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்ப், அதற்கான பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார். பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருப்பதால், அவர் முன்கூட்டியே உடல் பரிசோதனையை முடித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.