ஏமாந்தீங்களா! : விமான பணிப்பெண்ணாக மாறி பத்திரிகையாளர்களை பிராங் செய்த ஜில் பைடன்

ஏமாந்தீங்களா! : விமான பணிப்பெண்ணாக மாறி பத்திரிகையாளர்களை பிராங் செய்த ஜில் பைடன்
ஏமாந்தீங்களா! : விமான பணிப்பெண்ணாக மாறி பத்திரிகையாளர்களை பிராங் செய்த ஜில் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்  விமான பணிப்பெண் போல உடை அணிந்து பத்திரிகையாளர்களை பிராங் செய்துள்ளார். முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதனை அவர் செய்துள்ளார். கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார் ஜில் பைடன். அப்போது அவருடன் பத்திரிகையாளர்களும் பயணம் செய்துள்ளானர். 

பயணத்தின் போது கருப்பு நிற ஆடை அணிந்த விமான பணிப்பெண் ஒருவர் மதிய நேர உணவுக்கு பின் பயணிகளுக்கு ‘ஐஸ் கிரீம்’ கொண்டு வந்து தந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் ‘ஜாஸ்மின்’ என நேம் டேகில் இருந்தது. அப்போது தலையில் விக் வைத்திருந்தார் அவர். சற்று நேரத்தில் அந்த பணிப்பெண் அமெரிக்க நாட்டின் முதல் குடிமகளான ஜில் பைடன் என அடையாளம் கண்டுள்ளனர் பயணிகள். 

உடனடியாக ‘அனைவரும் ஏமாற்றம் அடைந்தீர்களா!’ என சொல்லி புன்னகைத்துள்ளார் ஜில் பைடன். அது அந்த பயணத்திற்கு கலகலப்பு கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com