ஆப்கானில் உள்ள அமெரிக்க படையினரை வரும் செப்.11க்குள் திரும்ப பெற அதிபர் பைடன் முடிவு
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு படையினரை செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் திரும்ப பெற அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வெள்ளை மாளிகை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அதிபர் பைடனே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான் பயங்கவாத அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தலிபான் படையினரை வேருடன் அழிக்கவும் லட்ச கணக்கிலான அமெரிக்க ராணுவ படையினர் ஆப்கானிஸ்தானுக்கு வந்து அந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் படைகளை திரும்ப பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளார் அதிபர் பைடன். அதோடு தலிபான் பயங்கரவாதிகளை எதிர்க்கும் பணிகளை இனி ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவம் பார்த்துக் கொள்ளும் என அவர் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த பணியை செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான இந்த யுத்ததில் ஆயிர கணக்கான பாதுகாப்பு படையினரையும் அமெரிக்கா இழந்துள்ளது.