'6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றவர், ஒரு பெண் பித்து நபர்!'- அமெரிக்க போலீஸ்

'6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றவர், ஒரு பெண் பித்து நபர்!'- அமெரிக்க போலீஸ்

'6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றவர், ஒரு பெண் பித்து நபர்!'- அமெரிக்க போலீஸ்
Published on

அமெரிக்காவின் ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் பார்லர்களில் 6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒருபெண் பித்து பிடித்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் என்று அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு இடத்தில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு காரணம் 21 வயது நிரம்பிய ராபர்ட் ஆரோன் லங் என தெரிவிக்கபட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பரவலுக்கு அடுத்ததாக நிறவெறி பேதம் தொடர்பான குற்றங்கள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக ஆசிய - அமெரிக்கர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆசிய - அமெரிக்கர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், 6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றவர் பெண் பித்து பிடித்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பைடனும் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com