மூணு வருஷம் கடந்தாலும் இந்த பீட்சா கெட்டுப்போகாது !

மூணு வருஷம் கடந்தாலும் இந்த பீட்சா கெட்டுப்போகாது !

மூணு வருஷம் கடந்தாலும் இந்த பீட்சா கெட்டுப்போகாது !
Published on

3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் பீட்சாவை அமெரிக்க ராணுவ சமையல் பிரிவு வல்லுநர்கள் தயாரித்துள்ளனர். 

சாப்பாடு பிரியர்களை சுண்டி இழுக்கு பீட்சா எனும் ரொட்டி வகை உணவு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பிரபலம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பீட்சாவை அறியாதவர்கள் இல்லை.  இத்தாலிய உணவான பீட்சாவை உலகில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் தெரியாதவர்கள் இல்லை. இச்சிறப்பு வாய்ந்த பிட்சா தற்போது 3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் படி தயாரித்து இருக்கிறார்கள். 

3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் பீட்சாவை அமெரிக்க ராணுவ சமையல் பிரிவு வல்லுநர்கள் தயாரித்துள்ளனர். போர் போன்ற அவசர நேரங்களில் இந்த பீட்சாவை ராணுவ வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த பீட்சாவுக்கு 'மீல்ஸ் ரெடி பார் ஈட்' என பெயரிடப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு சுவை மாறாமல் பதமாக இருக்கும்.மேலும் இந்த பீட்சா ராணுவ வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போர்கால தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படும் இந்த பீட்சா இன்று உணவில் உலகளவில் நவநாகரீகத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com