\
விமானத்தில் பீர் தராததால் நடந்த அக்கப்போர் !

விமானத்தில் பீர் தராததால் நடந்த அக்கப்போர் !

விமானத்தில் பீர் தராததால் நடந்த அக்கப்போர் !
Published on

அமெரிக்காவில் விமானத்தில் பீர் தராததால் கடுப்பான பயணி பெரிய களேபரத்தை செய்திருக்கிறார். அமெரிக்காவில் உள்நாட்டு விமானம் சுற்றுலாப் பிரியர்களின் உல்லாச நகரான மியாமி தீவில் இருந்து செயின்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் உற்சாகமாக மகிழ்ச்சியாக
பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பயணிகளில் ஒருவரான ஜேசன் பெலிஸ் என்பவர் பணிப் பெண்ண் ஒருவரிடம் பீர் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பணிப் பெண் இன் முகத்துடன் ஜேசனுக்கு ஒரு பீர் கொடுத்துள்ளார்.

அந்த பீரை ஆசைத்தீர குடித்து முடித்தப் பின், மீண்டும் ஒரு பீர் வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் கொடுத்துள்ளார். இதனையடுத்து போதை அதிகமான ஜேசன் மீண்டும் பீர் கேட்டுள்ளார், இதற்கு பணிப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடுப்பான பயணி ஜேசன், கத்தி கூச்சலிட்டு கலாட்டா செய்துள்ளார். பின்பு, கழிவறைக்கு சென்ற அவர் உள்தாழிட்டு வெளியே வராமல் "அறப்" போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்த ஜேசன், தன் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் மடியில் அமர்ந்து தகராறு செய்தார். இதனால் ஜேசனுக்கும், சக பயணிக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்துள்ளது. பின்பு, ஜேசனை விலக்கி சாந்தப்படுத்தினர் விமானப் பணிப் பெண்கள். அப்போதும் அடங்காத ஜேசன், கத்தியை எடுத்து கையை அறுத்துக்கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த செயின்ட் குரோயிஸ் போலீஸார், ஜேசனை விமான நிலையத்தில் கைது செய்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com