கொரியாவில் போர்ப்பதற்றம் சூழ்ந்திருக்கும் நிலையில், இரு கொரிய நாடுகளுக்கும் இடையே உள்ள ராணுவமற்ற பகுதிக்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பயணம் மேற்கொண்டார்.
ராணுவமற்ற பகுதியில் உள்ள பன்முஞ்சோம் கிராமத்துக்குச் சென்று அவர் ஆய்வு நடத்தினார். வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்திருக்கும் நிலையில், பென்ஸின் பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அப்போது பேசிய அவர், ’வடகொரிய விவகாரத்தைக் கையாளுவதில் அனைத்து வாய்ப்புகளையும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பகுதி விடுதலையின் எல்லை. உத்திசார்ந்து அமெரிக்கா பொறுமை காத்த காலம் முடிந்து விட்டது’ என்று அவர் கூறினார்.