வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு கடற்பரப்பின் மீது அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ள வடகொரிய கடல் மேற்பரப்பில், அமெரிக்காவின் B1 லான்சர் ரக குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்களின் பாதுகாப்புடன் பறந்து சென்றன. அமெரிக்க விமானப் படையின் பலத்தை வடகொரியாவுக்கு உணர்த்தும் விதமாக இவ்விமானங்கள் பறந்ததாகத் தெரிகிறது. இதனால் வடகொரியா - அமெரிக்கா இடையே மோதலுக்கான சூழல் அதிகரித்துள்ளது.

