“இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” - அமெரிக்கா

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் விரைந்து முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் விரைந்து முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தார். அதுவே அனைவரின் விருப்பமும் என தெரிவித்த அவர், “ஹமாஸ் படையினர் தங்கள் ஆயுதங்களை துறந்து, பிணைக் கைதிகளை விடுவித்து சரணடைந்தால், ஒரே நாளில் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்” என கூறினார்.

gaza
gazapt web

ஹமாஸ் படைகளால் இந்த போர் தொடங்கப்பட்டதால், தங்கள் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது என ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என தங்களுக்கு தெரியாது எனக்கூறிய ஜான்கிர்பி, போரை நிறுத்துவது குறித்து இஸ்ரேலுக்கு தங்களால் அறிவுறுத்த முடியாது என தெரிவித்தார்.

இஸ்ரேல் ஹமாஸ்
"இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்து வருகிறது.." - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், காஸா பகுதியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இஸ்ரேல் மக்கள் ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com