“அதை மட்டும் ஒரு போதும் அமெரிக்கா ஆதரிக்காது” இஸ்ரேல் பிரதமருக்கு விழுந்த இடி

காஸா பிராந்தியம் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுவதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
அமெரிக்கா ஆதரிக்காது
அமெரிக்கா ஆதரிக்காதுபுதிய தலைமுறை

காஸா பிராந்தியம் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல்,
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல்,

போருக்குப் பின்னர் காஸா பிராந்தியத்தின் பாதுகாப்பை இஸ்ரேல் கவனிக்கும் என்ற பெஞ்சமின் நெதன்யாகுவின் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், “பாலஸ்தீன மக்கள் காஸாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை ஒருபோதும் அமெரிக்கா ஆதரிக்காது.

அமெரிக்கா ஆதரிக்காது
குழந்தைகளின் சுடுகாடாக மாறும் காஸா.. இந்த துயரத்திற்கு ஒரு முடிவேயில்லையா.. போர் நிறுத்தம் எப்போது?

காஸா பாலஸ்தீன மக்களின் நிலம். அது எப்போதும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலை. இஸ்ரேலியர்கள் மற்றும் பிறர் மீது தாக்குதல் நடத்துவதற்கான தளமாக காஸா இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்க உறுதியாக உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதிக்கு முந்தைய நிலை காஸாவில் மீண்டும்
திரும்பாது. காஸாவில் இருந்து இதுவரை 400க்கும் அதிகமான அமெரிக்கர்கள் ரஃபா எல்லை வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளனர். வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் காஸாவில் இருந்து ரஃபா வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com