உலகம்
வடகொரியாவுடன் சமரசம் கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்
வடகொரியாவுடன் சமரசம் கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்
வடகொரியா மீதான கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் முன் நிபந்தனை ஏதும் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அறிவித்திருந்தார். இதனால் வடகொரியா மீதான கொள்கையில் மென்மையான போக்கை கடைபிடிக்க அமெரிக்கா முடிவு எடுத்திருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் புதிதாக எந்தக் கொள்கையையும் உருவாக்கவில்லை என்றும், பழைய கொள்கையே தொடர்ந்து நீடிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வடகொரியாவும் தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை குறைக்கவில்லை.