அணு ஆயுத ஒப்பந்தம்... விலகிய ரஷ்யாவுக்கு அமெரிக்கா சொன்ன பதில்!

அணு ஆயுத ஒப்பந்தம்... விலகிய ரஷ்யாவுக்கு அமெரிக்கா சொன்ன பதில்!
அணு ஆயுத ஒப்பந்தம்... விலகிய ரஷ்யாவுக்கு அமெரிக்கா சொன்ன பதில்!

அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”இது பொறுப்பான செயல் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் திடீர் என அறிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யா அடுத்து என்ன செய்யப்போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றன. இதுதொடர்பாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் உரையாற்றிய புடின், ”உக்ரைன் போா் விவகாரத்தில் நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தொடா்ந்து மறுத்து வருகின்றன. இந்த போரை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம்.

இந்த காரணத்தால், அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் தற்காலிகாமாக விலகுகிறோம். இதற்குப் பிறகு அமெரிக்கா புதிய அணு ஆயுத சோதனைகளில் இறங்கினால், ரஷியாவும் அதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்திருந்தார்.

புடினின் இந்த முடிவு பொறுப்பற்றது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ”அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி எந்த நேரத்திலும் ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச தயாராக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், “புடின், இந்த அவசர முடிவை மறுபரிசீலனை செய்வார் என பிரிட்டன் நம்புகிறது” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்யா வெளியுறவு அமைச்சகம், ”ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்தி வைப்பதற்கான முடிவு தொடரக்கூடியது. அந்த செயலை தொடர வேண்டுமானால் அமெரிக்கா உடன்படிக்கையின்படி நம்பிக்கையுடனும், மனச்சாட்சியுடனும் செயல்படுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புடினின் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர், ”அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது. இது பொறுப்பான செயல் அல்ல. எனினும் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com