சீனா சென்றடைந்தார் அதிபர் ட்ரம்ப்: வடகொரியாவுக்கு செக்?
அரசுமுறைப்பயணமாக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கு, சீனா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் மற்றும் தென்கொரிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா சென்றடைந்தார். பெய்ஜிங்கில் தனது மனைவி மெலானியாவுடன் தரையிறங்கிய ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் புடைசூழ அவர் அதிபர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஸீ ஜின்பிங்கை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக வடகொரியாவுக்கு, சீனா தரப்பில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிபர் ட்ரம்பின் வரவால், இரு நாடுகளுக்கு இடையிலான கசப்பான உணர்வுகள் மறைந்து எதிர்க்காலத்தில் சிறப்பான நட்புறவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மலரும், என சீன வெளியுறவு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.