ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதுகாப்புகவசங்களுக்காக போராடும் அமெரிக்க செவிலியர்

ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதுகாப்புகவசங்களுக்காக போராடும் அமெரிக்க செவிலியர்
ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதுகாப்புகவசங்களுக்காக போராடும் அமெரிக்க செவிலியர்

உலகம் முழுவதும் 207 நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் உலுக்கிவருகிறது. ஒட்டுமொத்தமாக உலக நாடுகள் அழுத்தத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச அமைப்புகள் கூறியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையோ 12 லட்சத்தை கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும் கவச உடைகள் போதுமானதாக இல்லை என்று செவிலியர் அமைப்பினர் அரசை வீதியில் இறங்கி போராடி வலியுறுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கவசங்கள், செயற்கை சுவாச கருவிகள மற்றும் உயிர்காக்கும் கருவிகள் போதிய அளவில் கிடைக்காவிட்டால் உயிரிழப்புகள் அதிகமாகும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இத்தாலியை விட ஸ்பெயினில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவ்விரு நாடுகளும், ஐரோப்பாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக விளங்குகின்றன. இவ்விரு நாடுகளும், சீனாவிடம் ஆலோசனை கேட்டு பெறுகின்றன. இத்தாலிக்கு சீனா 3 மருத்துவக்குழுக்களையும் அனுப்பி உள்ளது. ஜெர்மனியிலோ உயிரிழப்பு 1160 ஐ நெருங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் 19 வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார்.

பிரான்சில் ஒருநாளில் 2003 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிகை 6500ஐ நெருங்கிவிட்டது. மத்திய கிழக்கில் அதிகம் பாதிக்கப்ட்ட ஈரானில், பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தனிமனித இடைவெளி நன்கு கடைபிடிக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளதால் ஸ்மார்ட் டிஸ்டன்சிங் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்போவதாக ஈரான் கூறியுள்ளது. பிரிட்டனில், 24 மணிநேரத்தில் 4450 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்க 38 ஆயிரத்து 100 ஐ கடந்துவிட்டது. அங்கு 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தது.

உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஒருபுறம் எனில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளே திணறும் நிலை நீடிக்கிறது. அனைவருக்குமான மருத்துவ வசதி என்பது பல நாடுகளில் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனாவால் ஊரடங்கை அமல்படுத்திவருவதால் பல நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com