அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள முதலை குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கலிபோர்னியாவின் சான் டீகோவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் முதலை ஒன்று அண்மையில் முட்டைகள் இட்டு அடைகாத்து வந்தது. அதில் முட்டைகளை உடைத்துக் கொண்டு மூன்று முதலைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்த காட்சி, உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேற்கு ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த இந்த வகை முதலைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. இதனால் இந்த முதலைகளை பாதுகாக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.