காவலில் இருந்து விடுவிக்க மறுப்பு..பெண் நீதிபதியை தாக்க பாய்ந்து மேலே குதித்த இளைஞர்.. வைரல் வீடியோ!

அமெரிக்காவில் நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதியை இளைஞர் தாக்கிய வீடியோவெளியாகியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காட்விட்டர்

நெவாடா மாகாணத்தின் கிளார்க் கவுன்டி நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ரெட்டென் எனும் இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த பெண் நீதிபதி மேரி கேய், இளைஞரை காவலில் இருந்து விடுவிக்க மறுத்தார். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர், நீதிபதியை நோக்கி ஓடிச் சென்று அவர்மீது தாவி தாக்கினார். இதில் நீதிபதி கீழே விழுந்தார். அப்போதும் அவரை தாக்கினார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆக்ரோஷமாக செயல்பட்ட இளைஞர், நீதிபதிக்கு அருகில் இருந்த மற்ற நீதிபதிகளையும் தாக்கினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, இளைஞரை அங்கிருந்தவர்கள் பிடித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் நீதிபதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com