\
கலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு

கலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு

கலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு
Published on: 


அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் சோனோமா பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அங்குள்ள பிரபலமான ஒயின் தயாரிப்பு ஆலைகளும், சில முக்கிய கட்டடங்களும் தீயில் சேதமடைந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றன. காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க 9 ஆயிரம் பேர் போராடி வருவதாகவும் தீயணைப்பு முயற்சியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் காற்று பலமாக அடிப்பது தீயை தீவிரப்படுத்தும் என அஞ்சுவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர். ஏராளமான மரங்களும் கட்டடங்களும் தீயில் சிக்கி கருகியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com