ராம்நாத் கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து: இணைந்து பணியாற்ற விருப்பம்!

ராம்நாத் கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து: இணைந்து பணியாற்ற விருப்பம்!

ராம்நாத் கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து: இணைந்து பணியாற்ற விருப்பம்!
Published on

குடியரசுத் தலைவர் தேர்தலில்‌ வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஹேதர் நயூர், ராம்நாத் கோவிந்துடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா ஆர்வமுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். இதேபோல இலங்கை அதிபர்‌‌ சிறிசேனாவும் வாழ்த்துக் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்‍காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக சார்பாக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக மீரா குமார் ஆகியோர் போட்டியிட்டனர். டெல்லியில் நேற்று நடைபெற்ற வாக்‍கு எண்ணிக்‍கையில், ராம்நாத் கோவிந்த் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை, குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மக்‍களவை தலைமைச் செயலாளருமான அனுப் மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com