\
ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - கண்டனம் தெரிவித்த அமெரிக்கா

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - கண்டனம் தெரிவித்த அமெரிக்கா

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - கண்டனம் தெரிவித்த அமெரிக்கா
Published on: 

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து வடகொரியா புதிதாக இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறும் வகையில் வடகொரியா செயல்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு வடகொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com