கை, கால்களை இழந்து கோமா நிலைக்குப்போன அமெரிக்க பெண்மணி! மீன் சாப்பிட்டதால் இப்படியொரு விபரீதமா!

அமெரிக்காவில் மீன் சாப்பிட்டு அதனால் கை, கால்களை இழந்ததுடன், கோமா நிலைக்குப் போன விஷயம்தான் தற்போதைய வைரல் செய்தியாக இருக்கிறது.
திலப்பியா, லாரா பராசாஸ்
திலப்பியா, லாரா பராசாஸ்ட்விட்டர்

கோமா நிலைக்குப் போன அமெரிக்க பெண்மணி

அசைவ உணவுகளில் ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியது மீன்களும் ஆகும். உண்மையில், மீன்களில் பல சத்துகள் நிறைந்துள்ளன. சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக, அன்றாடம் மீன் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள்கூட ஆலோசனை கூறுகின்றனர். அதேநேரத்தில், அமெரிக்காவில் மீன் சாப்பிட்டு அதனால் கை, கால்களை இழந்ததுடன், கோமா நிலைக்குப் போன விஷயம்தான் தற்போதைய வைரல் செய்தியாக இருக்கிறது.

லாரா பராசாஸ்
லாரா பராசாஸ்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா பராசாஸ். 40 வயது மிகுந்த இந்தப் பெண்மணி, உள்ளூர் சந்தை ஒன்றுக்குச் சென்று ’திலப்பியா’ என்ற மீன் வகையை வாங்கிவந்து வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கை விரல்கள், பாதங்கள், கீழ் உதடு ஆகியன கறுப்பாக மாறியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக அவருடைய தோழி மெசினா தெரிவித்துள்ளார்.

கடல் உணவுகளில் காணப்படும் கொடிய பாக்டீரியாக்கள்

இதுதொடர்பாக தோழி மெசினா கூறுகையில், “லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாசக்கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார்செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனைச் சரியாக வேகவைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஒரு மாத காலமாக தங்கியிருக்கும் லாராவுக்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அறுவைச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. அவருடைய கை, கால்கள் முற்றிலும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையும் தெரிவித்துள்ளது.

tilapia fishes
tilapia fishestwitter

பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு

இதுகுறித்து தொற்று நோய் நிபுணர் டாக்டர் நடாஷா, ”விப்ரியோ வல்னிஃபிகஸ் (Vibrio Vulnificus) என்ற நோயால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டார். இது பொதுவாக மூலக்கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய பாக்டீரியா காரணமாக ஏற்படும். எனவே, இதுபோன்ற கடுமையான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க கடல் உணவை முறையாக வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக அல்லது அசுத்தமான நிலையில் முறையாகச் சமைக்காமல் சாப்பிட்டால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என எச்சரித்துள்ளார்.

விப்ரியோ வல்னிஃபிகஸ் என்பது என்ன?

இந்த அரிய வகை மாமிசம் உண்ணும் பாக்டீரியாவான விப்ரியோ வல்னிஃபிகஸ், தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் கூற்றுப்படி, விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியாவானது உயிருக்கே ஊறு விளைவிக்கும் தொற்று காயங்களை ஏற்படுத்தக்கூடியது. விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேக பராமரிப்பு தேவை அல்லது பெரும்பாலும் மூட்டுக்களை நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். மேலும் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இறக்கும் நிலை ஏற்படும்.

வல்னிஃபிகஸ் பாக்டீரியா
வல்னிஃபிகஸ் பாக்டீரியாபுதிய தலைமுறை

சில விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியா தொற்றானது நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ் தொற்றுக்கு வழிவகுக்கிறது. இந்த தொற்றால் திறந்த புண் ஏற்பட்ட இடத்தில் உள்ள மாமிசமானது இறந்துவிடுகிறது. நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ் தொற்றானது ஒன்றுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டாலும், இதனை ’மாமிசம் உண்ணும் பாக்டீரியா’ என அழைக்கின்றனர். 1988 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவில் 1,100க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் 159 இறப்புகள் பதிவானதாகவும் அறிவியல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

திலப்பியா மீன்களில் காணப்படும் வேறு பாக்டீரியாக்கள்!

உலக அளவில் அதிகமாக வளர்க்கப்படும் மீன்களில் திலப்பியா மீன் முக்கிய இடம் வகிக்கிறது. அதிக புரதச்சத்து, துரித வளர்ச்சி மற்றும் அளவிலும் பெரிதாக இருப்பதால், இது வளர்ப்பிற்கு உகந்த மீன் வகையாகத் திகழ்கிறது. சரியான உணவு வழங்காமல் இருந்தாலும், நீர் மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்காவிட்டாலும், திலப்பியா மீன்கள் பல்வேறுவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளாகும். பெரும்பாலும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் போன்ற உயிர்க்காரணிகளால் திலப்பியாவில் நோய்கள் ஏற்படுகின்றன. ஸ்டெரெப்ரோகாக்காசிஸ், காளம்னாரிஸ் மற்றும் ஏரோமோனாடு செப்டிசீமியா போன்றவை பாக்டீரியாவினால் ஏற்படும் முக்கிய நோய்களாகும்.

tilapia fishes
tilapia fishestwitter

டிரைக்கோடினா, டாக்டைலோகைரஸ், கைரோடாக்டைனஸ், ஆர்குலஸ் மற்றும் லெர்னயே போன்ற ஒட்டுண்ணிகளாலும் திலப்பியா மீன்கள் நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. டிரைக்கோடினா ஒட்டுண்ணி மீன்களின் தோல் மற்றும் செவுள்களை அதிகமாகத் தாக்கும். ஸ்டெரெப்ரோகாக்காசிஸ் நோய், மீன்களை எல்லா பருவத்திலும் தாக்கும். ஆனாலும் பெரிய மீன்களை அதிகமாக தாக்கும். இந்த நோய் விரைவாக நீரின் மூலம் பரவக்கூடியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com