”பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐ.நா சட்டத்திற்கேற்ப இயற்றப்படவில்லை” - இலங்கையின் அம்பிகா குற்றச்சாட்டு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா. மனித உரிமை சட்டத்திற்கேற்பவோ, சாசனத்திற்கேற்பவோ இயற்றப்படவில்லை என மனித உரிமை ஆணையக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பிகா சற்குணநாதன்
அம்பிகா சற்குணநாதன்Facebook

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற கலந்தரையாடலில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அம்பிகா சற்குணநாதன், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விஷயம் என்றுதான் நாம் கூற வேண்டும். இந்த சட்டமானது ரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.

பல உரிமைகளைில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும் போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும்.

அரசாங்கமானது மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் மத்தியில் கடமைகள் உள்ளன. ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ.நா சாசனங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா. மனித உரிமை சட்டத்திற்கேற்ப இயற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கம் இதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவது என்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை பேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்'' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com