அமேசான் சி.இ.ஓ பதவியை துறக்கிறார் ஜெப் பெஸாஸ்!

அமேசான் சி.இ.ஓ பதவியை துறக்கிறார் ஜெப் பெஸாஸ்!

அமேசான் சி.இ.ஓ பதவியை துறக்கிறார் ஜெப் பெஸாஸ்!
Published on

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இன்றைய டிஜிட்டல் உலகில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்து வருகிறது. விண்டோ ஷாப்பிங், மொபைல் ஷாப்பிங் என அமேசானுக்கு நிகர் அமேசான்தான். கடந்த 1994 வாக்கில் அதை நிறுவியவர் ஜெப் பெஸாஸ். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர். இப்போது உலகின் நம்பர் 2 பணக்காரர் பெஸாஸ்தான். 27 வருடங்களுக்கு முன்னர் அவரது பெற்றோரிடம் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்று தான் பெஸாஸ் அமேசானை நிறுவினார்.

அப்போதிலிருந்தே அமேசானின் தலைமை செயல் அதிகாரியாகவும் அவரே செயல்பட்டு வந்தார்.  இந்த சூழலில்தான் சி.இ.ஓ பதவியிலிருந்து விலக  முடிவு செய்துள்ளதாக பெஸாஸ் அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் சார்பாக புதிய புராடக்களை அறிமுகம் செய்யும் பணியில் கவனம் செலுத்த உள்ளதாக பெஸாஸ் அறிவித்துள்ளார். வரும் ஜூலை - செப்டம்பர் காலாண்டின்போது பெஸாஸ் அந்த பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உள்ளார். அதே நேரத்தில் பெஸாஸ் அமேசானின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 

பெஸாஸுக்கு பிறகு அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இணைய சேவை பிரிவின் சி.இ.ஓ-வாக உள்ள ஆண்டி Jassy பொறுப்பேற்க உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com