அதிபர் பதவியேற்பு விழாவில் ஊதா நிற ஆடையில் அதிகாரப் பெண்கள் - அமெரிக்க ஊடகங்கள் கருத்து

அதிபர் பதவியேற்பு விழாவில் ஊதா நிற ஆடையில் அதிகாரப் பெண்கள் - அமெரிக்க ஊடகங்கள் கருத்து
அதிபர் பதவியேற்பு விழாவில் ஊதா நிற ஆடையில் அதிகாரப் பெண்கள் - அமெரிக்க ஊடகங்கள் கருத்து

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் ஊதா நிற ஆடை அணிந்திருந்தது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த 46-ஆவது அதிபர் பதவியேற்பு விழாவில் அதிக கவனம் ஈர்த்த பெண்மணிகளான கமலா ஹாரிஸ், மிட்சேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட அனைவரும் ஊதா நிற உடையில் காட்சியளித்தனர்.

பெண்கள் வாக்குரிமையை குறிக்கும் விதமாக கமலா ஹாரிஸும், மிஷல் ஒபாமாவும் ஊதா நிற ஷேடுகளில் ஆடை அணிந்து வந்தனர். ஜில் பைடன் அணிந்திருந்த நீல நிற ஆடையும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை குறிக்கும்விதமாக இருந்தது என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பொதுவாக ஊதாநிறம் ஒற்றுமையைக் குறிக்கக்கூடியது. குடியரசின் சிவப்பு மற்றும் ஜனநாயகத்தின் நீலம் இரண்டும் சேர்ந்துதான் ஊதாநிறம் உருவாகிறது என்பதை குறிக்கும்விதமாகவும், பெண்களுக்கு ஒளிமயமான எதிர்காலம், வலி மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை உணர்த்தும்விதகாவும் ஊதாநிற ஷேடுகளில் அவர்கள் ராயல் உடைகளை அணிந்துவந்ததாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com