All About Fattah1 Irans Hypersonic Missile Fired At Israel
Irans Hypersonic எக்ஸ் தளம்

இஸ்ரேலைத் தாக்கிய ஈரானின் ’Fattah-1 ஹைபர்சோனிக்’ ஏவுகணை.. அடேங்கப்பா.. இவ்ளோ சிறப்புகள் இருக்கா?

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறியும் ஈரான் தன்னுடைய ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
Published on

இஸ்ரேல் -ஈரான் மாறிமாறித் தாக்குதல்!

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அங்கு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள பொதுமக்களை விரைவில் வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. மேலும், ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், அலி கமேனியோ. “சரணடைய மாட்டோம்.. அமெரிக்கா இதில் தலையிட்டால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும். போர் தொடங்கிவிட்டது” எனப் பதிலடி கொடுத்திருந்தார். இதனால், அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

All About Fattah1 Irans Hypersonic Missile Fired At Israel
Irans Hypersonic எக்ஸ் தளம்

இந்த நிலையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறியும் ஈரான் தன்னுடைய ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம், இதுநாள் வரை ஈரான் ஏவிய ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. ஆனால், ஈரான் ஹைபர்சோனிக் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால்கூட அதனைத் தடுக்க முடியாமல் அவை இலக்கை வெற்றிகரமாய் அடைந்தன.

ஜெருசலேமுக்கு எதிராக ஈரான் ஹைபர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது இது முதல்முறை அல்ல. அக்டோபர் 1, 2024 அன்று ஜெருசலேமுக்கு எதிரான அதன் ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் II இன் போது இஸ்ரேலைத் தாக்க ஈரான் டஜன் கணக்கான ஃபட்டா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், தற்போதைய தாக்குதலின்போதே இது கவனம் பெற்றுள்ளது.

All About Fattah1 Irans Hypersonic Missile Fired At Israel
”சரணடைய மாட்டோம்; அமெரிக்கா இதில் தலையிட்டால் அது..” | ட்ரம்ப்-க்கு அலி கமேனி கொடுத்த பதிலடி!

ஹைபர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?

ஹைப்பர்சோனிக் என்ற சொல், பெரும்பாலும் அதன் கிளைடு வாகனங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மேக் 5இல் பயணிக்கின்றன. ஹைப்பர்சோனிக், ஒரு மணி நேரத்தில் 6,100 கி.மீ. (3,800 மைல்கள்) தூரத்தைக் கடக்கக்கூடியதாகும். அதாவது, ஒலியின் வேகத்தைவிட, ஐந்து மடங்கு கடக்கக்கூடியதாகும். எனவே, அதனைக் கண்டறிந்து இடைமறித்து தாக்க வேண்டும். ஃபட்டா-1 என்ற ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதன்முதலில் 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் பெயரிடப்பட்டது.

All About Fattah1 Irans Hypersonic Missile Fired At Israel
Irans Hypersonic எக்ஸ் தளம்

ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணையின் சிறப்புகள் என்ன?

இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற மிகவும் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக்கூட கடந்து செல்லும் வகையில் ஃபட்டா-1 வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இதை ’இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்’ என்று விவரிக்கிறது. இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டது. 1,400 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இது ஒற்றை-நிலை உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி திட எரிபொருளில் இயங்குகிறது. 200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஃபட்டா-1 எதிரிகளின் பாதுகாப்பைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் (HGV) போர்முனையுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது, மணிக்கு 17,900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது ஒரு நடுத்தர தூர ஏவுகணையாகும்.

All About Fattah1 Irans Hypersonic Missile Fired At Israel
ஈரானின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் புதிய ’மின்னல் கவசம்’.. இந்தியாவுடன் இணைந்து சாதித்த இஸ்ரேல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com