ஈரானில் இருந்து யாசுஜ் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் விபத்தில் நொறுங்கியது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யுசுஜ் நகருக்கு 100 பயணிகளுடன் விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது 20 நிமிடங்கள் ரேடார் தொடர்பை இழந்த அவ்விமானம், பாதுகாப்பு கருதி அவசரமாக தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மலைப்பகுதி என்பதால் தரையிறங்க முடியமால் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் 100 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடும் முயற்சிலும், பயணிகள் யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று மீட்கும் முயற்சியிலும் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பயணிகளின் உறவினர்கள் உட்பட ஈரானின் இரு நகரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.