உலகம்
1000 லைக்ஸ்களுக்காக 15வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போடுவேன் என மிரட்டிய நபர்
1000 லைக்ஸ்களுக்காக 15வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போடுவேன் என மிரட்டிய நபர்
அல்ஜீரியாவில், 1000 லைக்ஸ்களுக்காக 15வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், அந்தக் குடியிருப்பின் 15வது மாடியின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்து “1000 லைக்ஸ் வரவேண்டும். இல்லையெனில் குழைந்தையயை கீழே போட்டுவிடுவேன்” என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பலர், குழந்தையை கொடுமைபடுத்தியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, 2 ஆண்டுகள் தண்டனை விதித்து அல்ஜீரியா நீதிமன்றம் உத்தரவிட்டது.