அலஸ்காவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

அலஸ்காவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

அலஸ்காவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!
Published on

அமெரிக்காவில் உள்ள அலஸ்கா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வடக்கு அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரம் அலஸ்கா. புகழ்பெற்ற இந்த நகரில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சாலைகள் துண்டாகின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே ஓடி வந்தனர். அவர்கள் பீதியுடன் சாலையில் கூடி நின்றனர். இந்த நிலநடுக்கத்தில் கண்ணாடிகள் கிழித்தும் வீட்டில் இருந்த பொருட்கள் விழுந்தும் பலர் காயமடைந்தனர். உயிரிழப்பு பற்றி தகவல் இதுவரை வரவில்லை.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவாகி யுள்ளது. ‘நில்நடுக்கம் காரணமாக, வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்பட்டுவிட்டன. சாலைகளில் செல்ல வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com