குடும்ப உறுப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க சிறுவன்

குடும்ப உறுப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க சிறுவன்

குடும்ப உறுப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க சிறுவன்
Published on

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அலபாமா அருகே உள்ள எல்க்மான்ட் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இந்தத் துணிகர செயலை அச்சிறுவன் செய்துள்ளான். சிறுவனால் சுடப்பட்ட ஐவரில் மூவர் அதே இடத்தில் இறந்த நிலையில் மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குடும்பத்தினரை கொன்ற சிறுவன் உடனடியாக தான் கொலை செய்த தகவலை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டான். 

போலீஸ் விசாரணையில், கொல்லப்பட்டது 38 வயது ஜான் சிஸ்க், 35 வயது மேரி சிஸ்க், சிறுவனின் 6 வயது தம்பி, 5 வயது தங்கை, 6 மாத தம்பி ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெரும் சமூக அவலமாக மாறி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இச்செயல் நடந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள தனது கடைகளில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் விற்பனையை நிறுத்திக்கொள்ளப்போவதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com