‘நீங்க அசிங்கமா இருக்கீங்க’: இளைஞருக்கு துண்டு சீட்டு கொடுத்த பெண் அதிகாரி நீக்கம்

‘நீங்க அசிங்கமா இருக்கீங்க’: இளைஞருக்கு துண்டு சீட்டு கொடுத்த பெண் அதிகாரி நீக்கம்
‘நீங்க அசிங்கமா இருக்கீங்க’: இளைஞருக்கு துண்டு சீட்டு கொடுத்த பெண் அதிகாரி நீக்கம்

நியூயார்க் விமான நிலையத்தில் இளைஞருக்கு துண்டு சீட்டு கொடுத்த பெண் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள் ளார். 

நியூயார்க்கை சேர்ந்தவர் நீல் ஸ்ட்ராஸ்நர். இவர் வெளியூர் செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். அதன் படி ரோசெஸ்ட்டர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு சோதனைக்கு சென் றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த பெண் அதிகாரி, அவரை மெட்டல் டிடெக்டர் வழியாக வரச் சொன்னார். நீல் தூரத்தில் வரும் போதே, அவரைக் கவனித்த அந்த அதிகாரி, ஒரு குறிப்பு ஒன்றை பேப்பரில் எழுதி, கிழித்துக் கையில் வைத்துக் கொண்டார். 

நீல் வந்ததும் அவர் கையில் அந்த பேப்பரை கொடுத்தார். பிறகு, ’இந்த குறிப்பை வாசிக்க போகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டுப் பயங்கரமாகச் சிரித்தார். உடனடியாக அதை வாசித்துப் பார்த்த நீலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில், ‘you ugly' என்று எழுதப் பட்டிருந்தது. இதுபற்றி உயரதிகாரிகளிடம் புகார் செய்தார் நீல். ’இதுபோன்ற நடத்தையை ஏற்க முடியாது’ என்று அந்த அதி காரியை பணியில் இருந்து நீக்கியது நிர்வாகம். அவர் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இது தொடர்பான வீடியோ பதிவை, தகவல் சுதந்திரத்தின் அடிப்படையில் இப்போது பெற்றுள்ள நீல், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com