முதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு!

முதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு!

முதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு!
Published on

விமானங்களில் பணியாற்ற முதன்முறையாக சவுதி பெண்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மா ன் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையர ங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகளைப் பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்ட சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஆடை கட்டுப்பா டும் தளர்த்தப்பட்டுள்ளது. 

இளவரசர் சல்மானின் இந்த நடவடிக்கை சவுதி அரேபியா பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இளவரசரின் அந்த உத்தரவில் பெண்கள் வெளியில் வரும்போது உடலை முழுவதும் மறைக்கும் நாகரிக உடைகள் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாகரிக ஆடைகளின் விற்பனை சவுதி அரேபியாவில் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில் ரியாத்தைச் சேர்ந்த பட்ஜெட் விமான நிறுவனமான பிளைநாஸ் (Flynas), முதன்முறையாக சவுதி பெண்களை துணை பைலட் டாகவும் விமானப் பணிபெண்களாகவும் பணி அமர்த்த முடிவு செய்தது. விமானத்துறையில் பணிபுரிய பெண்களுக்கு அதிகாரப் பூர்வமாக இது வரை தடைவிதிக்கப்படவில்லை என்றாலும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்தே பெண்கள் அதிகமாக சவுதி விமானங்களில் பணி யாற்றி வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக இந்த நிறுவனம் சவுதி பெண்களை வேலைக்கு சேர்க்க முடிவு செய்து அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. அது வெளியான 24 மணி நேரத்துக்குள் சுமார் ஆயிரம் சவுதி பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தகவலை பிளைநாஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சவுதியில் இருந்து இயக்கப்படும் மற்றொரு பட்ஜெட் விமான நிறுவனமான பிளை அடில் (Flyadeal), சவுதி பெண்களை பணியமர்த்த முடிவு செய்ததை அடுத்து பிளைநாஸ் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com