சூப்பர் ஜம்போ விமான உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்!
ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவனம், ஏ 380 என்ற சூப்பர் ஜம்போ விமான உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனம் ஏர்பஸ். பல்வேறு விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. உலகின் இயங்கும் பெரும்பாலான விமானங்கள் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவைதான்.
இந் நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய விமானமான சூப்பர் ஜம்போ எனப்படும் ஏர்பஸ் 380-ஐயும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம், ஏ 380 என்ற சூப்பர் ஜம்போ விமான உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏ 380 ரக சூப்பர் ஜம்போ விமானத்தின் கடைசி உற்பத்தி 2021 ஆம் ஆண்டு நிறுத்திக் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம்தான் அதிக அளவில் விமானங்களை வாங்கி வந்தது. இப்போது எமிரேட்ஸ், தனது கொள்முதலை கணிசமாக குறைத்துக் கொண்டதால் இந்த முடிவை ஏர்பஸ் எடுத்துள்ளது.