உக்ரைனை நெருங்கும் ஏர் இந்தியா விமானம்: இந்தியர்களின் மீட்பு எப்போது? -புதிய அப்டேட்

உக்ரைனை நெருங்கும் ஏர் இந்தியா விமானம்: இந்தியர்களின் மீட்பு எப்போது? -புதிய அப்டேட்
உக்ரைனை நெருங்கும் ஏர் இந்தியா விமானம்: இந்தியர்களின் மீட்பு எப்போது? -புதிய அப்டேட்

உக்ரைனின் தலைநகரை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் 4 விமானங்களை இயக்குகிறது. இதில் இன்று காலை புறப்பட்ட ஒரு விமானம் ருமேனியாவை சென்றடைந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நேற்று முன்தினம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில் உக்ரைன் தலைநகர் கீவில் வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போர் பதற்றத்தால் உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்தியர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன. தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அந்நாட்டின் அண்டை நாடுகளின் நில எல்லை வழியே பத்திரமாக வெளியேற்ற, மத்திய அரசு முடிவு செய்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேசியுள்ளது. இந்த நாடுகளின் எல்லைக்கு வரும் இந்தியர்களை, விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

இதில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏற்கனவே ஒரு ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. இந்த விமானம் தற்போது ருமேனியா சென்றடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com