\
துபாயில் கனமழை : 4 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

துபாயில் கனமழை : 4 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

துபாயில் கனமழை : 4 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
Published on

துபாயில் கனமழை பெய்து வருவதால் விமான ஓடுபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக துபாயில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக சாலைகளில் கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மெட்ரோவை பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் டிஎக்ஸ்பி விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கி இருப்பதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களும் துபாய் வேர்ல்ட் செண்ட்ரல் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்படுகின்றன. இன்னும் இரண்டு நாட்களுக்கு துபாயில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான வானிலை காரணமாக துபாய் செல்லும் 4 விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com