அசைவ விரும்பியான ட்ரம்பிற்கு சைவ சாப்பாடு வழங்க உத்தரவு

அசைவ விரும்பியான ட்ரம்பிற்கு சைவ சாப்பாடு வழங்க உத்தரவு
அசைவ விரும்பியான ட்ரம்பிற்கு சைவ சாப்பாடு வழங்க உத்தரவு

குஜராத் செல்லும் ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் டொனால்டு ட்ரம்ப், நேரடியாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். பின்னர் அங்கிருந்து இருவரும் சாலை‌ வழியாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடக்கும் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர். இந்தச் சூழலில், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் ட்ரம்ப் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ட்ரம்பை வரவேற்பதற்காக சபர்மதி ஆசிரமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் செல்லும் ட்ரம்ப் - மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவுகளை அகமதாபாத்தில் உள்ள FORTUNE LANDMARK HOTELல் பணியாற்றும் சுரேஷ் கண்ணா என்ற சமையல் கலைஞர் தயாரிக்கிறார். அதில் சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக குஜராத்தின் பாரம்பரிய உணவு வகையான காமன் என்ற உணவு முக்கிய இடம் வகிக்கிறது. கடலை மாவு மற்றும் தானியங்களின் மாவைக்கொண்டு காமன் தயாரிக்கப்படுகிறது. இது தவிர, தேநீர், காபி, தானிய குக்கீஸ், ஆப்பிள் பை, இஞ்சி டீ, ப்ரோகோலி, கான் சமோசா, ஐஸ் தேநீர் ஆகிய உணவுகளும் அவருக்கு வழங்கப்பட இருப்பதாக சமையல் கலைஞர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

பீட்சா, சாக்லெட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com