ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்ட ஜாக்கிசான் மகள்

ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்ட ஜாக்கிசான் மகள்

ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்ட ஜாக்கிசான் மகள்
Published on

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 19 வயது மகள் எட்டா நக், தன்பாலினத்தவரை திருமணம் செய்துக்கொண்டதாக கூறிஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ஜாக்கிசானின் மகள் எட்டாக் நக். இவர் கனடா நாட்டை சேர்ந்த அட்டுன் என்ற பெண்ணுடன் வாழ்ந்ததாக‌ கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட எட்டாக், ஹாங்காங்கில் சாலையோரத்தில் உள்ள ஒரு மேம்பாலத்துக்கு கீழே வசித்து வந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது. 

இந்நிலையில் தனது தோழி அட்டுனாவை திருமணம் செய்து கொண்டதாக எட்டா நக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன்பாலினத்தவரை மகள் எட்டா திருமணம் செய்து கொண்டிருப்பதால், நடிகர் ஜாக்கிசான் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. உலக பிரபலம் வாய்ந்த ஹாலிவுட் ஹீரோ ஜாக்கி என்பதால், இந்த விவகாரம் ஹாலிவுட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com