எலியில் வெற்றி; அடுத்து குரங்கு: கொரோனா மருந்து சோதனையில் முன்னேற்றம் காணும் தாய்லாந்து!

எலியில் வெற்றி; அடுத்து குரங்கு: கொரோனா மருந்து சோதனையில் முன்னேற்றம் காணும் தாய்லாந்து!

எலியில் வெற்றி; அடுத்து குரங்கு: கொரோனா மருந்து சோதனையில் முன்னேற்றம் காணும் தாய்லாந்து!

கொரோனாவுக்கான மருந்தை குரங்குகளிடம் பரிசோதித்து வருகிறது தாய்லாந்து அரசு.

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா
என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனவரி மாதம் சீனா கூறியது.

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் 83ஆயிரத்திற்குள் மட்டுமே உள்ளது.
உயிரிழப்பு 5ஆயிரத்திற்குள் ஆகும். ஆனால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும்,ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் 54 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே உலக நாடுகள் கொரோனாவைக் குணமாக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல மருந்துகள்
சோதனை முறையில் உள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான மருந்தை குரங்குகளிடம் பரிசோதித்து வருகிறது தாய்லாந்து அரசு. முதலில்
எலிகளிடம் சோதனை செய்த தாய்லாந்து அரசு அதில் வெற்றிகண்டது.

அடுத்தக்கட்டமாக குரங்குகளிடம் சோதனை நடைபெறுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு, எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடம் மருந்துக்கான முழு பரிசோதனை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி தாய்லாந்து மக்களுக்கானது மட்டுமல்ல. மனித இனத்திற்கானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com