இந்த 4 இருமல் சிரப்களும் ஆபத்தானவை ! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்த 4 இருமல் சிரப்களும் ஆபத்தானவை ! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்த 4 இருமல் சிரப்களும் ஆபத்தானவை ! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆப்பிரிக்கவின் காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காம்பியா நாட்டு சுகாதார அமைச்சகமானது கடந்த மாதம் பாராசிட்டமால் சிரப் பயன்பாட்டைத் தவிர்க்கக் கூறியிருந்தது. அப்போது அங்கு 28 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்திருந்த நிலையில் இப்போது இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் கெட்டுப்போன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்றும் தெரிவித்ததுள்ளது. அந்த 66 குழந்தைகளின் இறப்புகளில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்பான மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டதால் உலக சுகாதார நிறுவனம் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸை  கூறியிருப்பது , ‘ ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் ஆகிய மருத்துகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் , காம்பியாவில் இறந்த குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.


இந்த மருந்துகளை ஆய்வில் செய்ததில், அதிகளவில் டை எத்தலீன் க்ளைக்கால் மற்றும் எத்திலீன் க்ளைக்கால் உள்ளது . இந்த 4 மருத்துகள் குறித்து இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது, சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு கள்ள சந்தை மூலம்  ஏற்றுமதி செய்திருப்பதை உறுதி செய்துள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்தமருந்துகள் மருந்துகள் உள்நாட்டு, உலகச் சந்தையிலும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் ‘’  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com