ஆப்ரிக்கா | மாலி தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 48 தொழிலாளர்கள் பலியான சோகம்
தங்கத்தை பல தொழிலாளர்கள் தங்களின் உயிரை பணயமாக வைத்து பூமிக்கு அடி ஆழத்திலிருந்து சுரங்கங்கள் மூலமாக வெட்டி எடுக்கின்றனர். இப்படி இயங்கும் தங்கசுரங்கத்தில் ஒன்று ஆப்ரிக்காவில் உள்ள மாலி தங்கச்சுரங்கம். இதில் தங்கத்தை வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 தொழிலாளிகள் மண்ணிற்குள் புதையுண்டு இறந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க சுரங்கத்தில் மாலியும் ஒன்று, இப்பகுதியில் சீன அரசால் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இச்சுரங்கத்தை, சில தனியார் அமைப்புகள் தொடர்ந்து சட்டவிரோதமாக நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் விபத்துக்களுக்கும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை சட்டவிரோதமாக இயக்கப்பட்ட இந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இவர்களைத் தேடும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பகுதியில் தங்கச் சுரங்கத் தளத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதே போல், கடந்த ஜனவரி மாதம், தெற்கு மாலியில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
இந்நிலையில் உலக ஏழ்மையான நாடுகளில் மாலியும் ஒன்று என்பது கூடுதல் தகவல்.