afghanistan stoped river water vs pakistan
afgan riverx page

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ஆப்கான்!

இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
Published on

இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்த நிலையில், அந்நாட்டுக்கு செல்லும் முக்கிய நதிகளில் தண்ணீர் திறப்புக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தை தடுக்க புதிய அணையை கட்டும் முயற்சியில் ஆப்கன் அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பலூச் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலிபான் அரசின் ராணுவ ஜெனரல் முகமது முபின்கான், குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்ததாகவும், புதிய அணையை கட்ட நிதி திரட்டும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் முகமது முபின்கான் பேசும் காணொளியையும் அவர் இணைத்துள்ளார்.

afghanistan stoped river water vs pakistan
சிந்து நதி ஒப்பந்தம் | ”ரத்த ஆறு பாயும்” - மிரட்டல் விடுத்த பாக் தலைவர்.. பதிலடி கொடுத்த இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com