பாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்

பாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்

பாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்

ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கன் எல்லையில் இருக்கும் படைகளை காஷ்மீர் எல்லைக்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநிறுத்துவது தொடர்பான அமெரிக்கா - தாலிபன்கள் இடையிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் ஆப்கன் பிரச்னையுடன் காஷ்மீரை தொடர்புபடுத்த, பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையை இது காட்டுவதாக கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்னை இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, பாகிஸ்தான் வேண்டுமென்றே ஆப்கனை இதில் தொடர்பு படுத்துவதாக அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் ரோயா ரஹ்மானி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com