”கொன்று விடுவார்கள் என்றே நினைத்தோம்”- தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

”கொன்று விடுவார்கள் என்றே நினைத்தோம்”- தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

”கொன்று விடுவார்கள் என்றே நினைத்தோம்”- தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்
Published on

ஆப்கனில் தலிபான்களின் ஆட்சியமைப்புக்குப் பின், இரண்டு பத்திரிகையாளர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மனித உரிமை காக்கப்படும், பத்திரிகையாளர் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் தருகிறோம்' என்றெல்லாம் கூறி பதிவியேற்ற ஆப்கன் அரசு, தற்போது பத்திரிகையாளர்களை மனிதர்கள் என்கிற தொணியில்கூட மதிக்காமல், கொடுரமாக தாக்கியிருப்பது உலகளவில் கடும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அந்த பத்திரிகையாளர்களின் புகைப்படங்களை யாம் என்ற லாஸ் ஏஞ்செல்ஸை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் யாம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆப்கனை சேர்ந்த எட்டெலாட் ரோஸ் என்ற பத்திரிகையை சேர்ந்த நமெத் மற்றும் தகி என்ற இரு பத்திரிகையாளர்கள்தான் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் நிருபர், மற்றொருவர் வீடியோ எடிட்டர் என சொல்லப்படுகிறது. இவர்கள், சில தினங்களுக்கு தலிபானில் நடந்த பெண்கள் போராட்டத்தை காட்சிப்படுத்தியமைக்காக, இந்த துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக யாம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் பணிபுரிந்த நிறுவனமான எட்டெலாட் ரோஸ் பத்திரிகை நிறுவனம் தெரிவிக்கையில், “இரு பத்திரிகையாளர்களும் கடினமான குச்சிகளால் தனி அறைகளில் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

‘தலிபான்களின் அமைச்சரவையில் பெண்கள் சேர்க்கப்படவில்லை’ என்ற கோட்பாட்டின்கீழ் காபூலில் நடைபெற்ற ஒரு பெண்கள் போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க இடத்தில், அங்கு தலிபான்களின் இந்த தாக்குதலை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அங்கு செய்தி சேகரிக்க சென்ற மேலும் சில பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்” எனக்கூறப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சையிலுள்ள இருவரும் பத்திரிகையொன்றில் கூறுகையில், “நாங்கள் பத்திரிகையாளர்கள் என அவர்களின் எவ்வளவோ எடுத்துரைத்தோம். அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. எங்களை கொன்று விடுவார்கள் என்றே நினைத்தோம். அந்தளவுக்கு எங்களை தாக்கினார்கள்” எனக்கூறப்பட்டுள்ளது.

‘லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ்’ என்ற மற்றொரு பத்திரிகை நிறுவனமும், பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு தங்கள் நிறுவன ஊழியர்களும் உட்பட்டனர் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com