உலகம்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி - அதிபர் தலைமையில் ஆலோசனை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி - அதிபர் தலைமையில் ஆலோசனை
இலங்கையில் கடும் சிக்கல் உருவெடுத்துள்ள நிலையில், அதிபர், பிரதமர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கட்சிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் அதிபர் மாளிகையில் கூட்டப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும், ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், பல்வேறு கட்சியினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.