அமெரிக்கா: சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒளிபரப்பான இந்திய விவசாயிகளின் போராட்டம்

அமெரிக்கா: சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒளிபரப்பான இந்திய விவசாயிகளின் போராட்டம்
அமெரிக்கா: சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒளிபரப்பான இந்திய விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 76-வது நாளை எட்டியுள்ள நிலையில் அயல்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் அமெரிக்காவின் சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பாகி உள்ளது. 

சுமார் 100 மில்லியன் மக்கள் Tampa Bay Buccaneers மற்றும் Kansas City Chiefs அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்த்ததாக சொல்லப்படுகிறது. Tampa அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. 

அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் 30 நொடிகள் ஓடும் இந்த வீடியோவுக்கான நிதியை கொடுத்துள்ளனர். அதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியரின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. “வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் போராட்டம் இது”, “நாங்கள் உங்களுடன் நிற்போம்” என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com