”எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதர தடை” - ரஷ்யா

”எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதர தடை” - ரஷ்யா
”எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதர தடை” - ரஷ்யா

உக்ரைன் தலைநகரை ரஷ்ய ராணுவம் நெருங்கி வரும் நிலையில், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-இல் இருந்து ரஷ்ய ராணுவம் 3 மைல் தொலைவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ்-இல் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரை சூழ்ந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது என உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவில் உள்ள உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பயணச் செலவை மத்திய அரசே ஏற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com