\
Actress Selma Blair arrested and accused of abusing flight attendants
Selma Blairreuters

நடுவானில் பறந்த விமானம்.. திடீரென பணிப்பெண்ணைக் கடித்த பிரபல நடிகை!

முன்னதாக 2016-ஆம் ஆண்டிலும் மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த விமானத்தில் மருந்து மற்றும் மதுபானக் கலவையால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விமானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published on: 
Summary

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் ஊழியர்களுடன் ஏற்பட்ட கடுமையான மோதல் மற்றும் தாக்குதலைத் தொடர்ந்து, ஹாலிவுட் நடிகை செல்மா பிளேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்கு டெல்டா பயணிகள் விமானம் சென்றுள்ளது. இதில், 'லீகலி பிளாண்ட்', 'ஹெல்பாய்' மற்றும் 'க்ரூயல் இன்டென்ஷன்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த செல்மா பிளேர் பயணித்துள்ளார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறக்க செல்மா பிளேர் முயன்றதாகவும், அதைத் தடுக்க வந்த பணிப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தின்போது அவர் ஒரு விமானப் பணிப்பெண்ணைக் கையால் தாக்கியதாகவும், மற்றொரு பணியாளரைக் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Selma Blair
Selma Blairreuters

இதில் இரு பணியாளர்களும் காயமடைந்து உடனடியாக மருத்துவ உதவிக்கு உட்படுத்தப்பட்டனர். விமானம் நியூயார்க்கில் தரையிறங்கிய நிலையில், புகாரின்பேரில் செல்மா பிளேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். செல்மா பிளேர் நரம்பியல் சார்ந்த மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர். தீவிர நரம்பியல் மருந்துகளைத் தவறவிட்டதால் ஏற்பட்ட கடுமையான குழப்பம் மற்றும் திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 2016-ஆம் ஆண்டிலும் மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த விமானத்தில் மருந்து மற்றும் மதுபானக் கலவையால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விமானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com