\
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வில் ஸ்மித்!

ஆஸ்கர் விருது: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வில் ஸ்மித்!

ஆஸ்கர் விருது: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வில் ஸ்மித்!
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெறுகிறது. இதில் நடிகர் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அவர் ‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக விருதை வென்றுள்ளார். 

இந்த திரைப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாகி இருந்தது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருந்தார். சுமார் 145 நிமிடங்கள் ரன் டைம் கொண்டது இந்த திரைப்படம். இதனை இயக்குனர் Reinaldo மார்கஸ் கிரீன் இயக்கியிருந்தார். 

பிரபல டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. உலக அளவில் சுமார் 38.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூல் செய்திருந்தது.

53 வயதான வில் ஸ்மித் கடந்த 1986 முதல் திரைத்துறையில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கான சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் அவர் இடம் பிடித்துள்ளார். இந்த முறை விருதை வென்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com