‘நீங்க நினைச்சதவிட இந்த டான்ஸ் கொஞ்சம் கஷ்டம்தான்’-கொரிய பெண்ணின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்ஸ் வைரல்

‘நீங்க நினைச்சதவிட இந்த டான்ஸ் கொஞ்சம் கஷ்டம்தான்’-கொரிய பெண்ணின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்ஸ் வைரல்

‘நீங்க நினைச்சதவிட இந்த டான்ஸ் கொஞ்சம் கஷ்டம்தான்’-கொரிய பெண்ணின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்ஸ் வைரல்

‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜூன் ஆடியதுபோல், கொரியப் பெண் ஒருவர் இமிடேட் செய்து நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் , கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் 1’. இந்தப் படத்தின் பாடல்கள், படம் வெளியீடு செய்வதற்கு முன்பே பெரும் வரவேற்பு பெற்றது. பின்னர், படம் வெளியானநிலையில் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் பாடல்களின் நடன அசைவுகள் மேலும் பிரபலமடைந்தது. குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜூனின் நடன அசைவுகளை, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, பிராவோ, டேவிட் வார்னர், வங்கதேச வீரர் நஸ்மூல் உள்ளிட்டோர் இமிடேட் செய்து ஆடியது வைரலாகியது.

இதேபோல் பாலிவுட் பிரபலங்களும், அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்தை இமிடேட் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகியது. மேலும், படம் வெளியான 50 நாட்களில் புஷ்பா திரைப்படம் ரூ. 365 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்நிலையில், கொரியன் ஜி1 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவில், கொரியப் பெண் ஒருவர், தத்ரூபமாக அல்லு அர்ஜூனின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்பைஸை, அப்படியே ஆடியுள்ளார்.

மேலும், நீங்கள் நினைப்பதைவிட இந்த நடனம் கடினமாக இருக்கிறது என்றும், கொரிய வெர்ஷனில் அல்லு அர்ஜூன் என்றும் அந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இது வைரலானநிலையில், கொரியப் பெண்ணின் நடன வீடியோவை சுமார் 1.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அந்த கொரியப் பெண்ணுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com